முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல் மேற்படிப்புகளில் சேர புது நுழைவுத் தேர்வு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம்..!

பொறியியல் மேற்படிப்புகளில் சேர புது நுழைவுத் தேர்வு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி TANCET தேர்வும், மார்ச் 26-ல் CEETA தேர்வும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு, இந்தாண்டு முதல் புதிதாக நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் ME, M.Tech, MCA, MBA படிப்புகளுக்கு TANCET நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.

இதை இரண்டாக பிரித்து, கணிணி துறையின் முதுநிலை படிப்பான MCA மற்றும் தொழில் துறைக்கான முதுநிலை படிப்பான MBA-வில் சேருவதற்கு மட்டும் TANCET தேர்வு கருத்தில் கொள்ளப்படும் எனவும், முதுநிலை பொறியியல் படிப்புகளான ME மற்றும் M.Tech படிப்புகளில் சேருவதற்கு CEETA என்ற புதிய தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி TANCET தேர்வும், மார்ச் 26-ல் CEETA தேர்வும் நடத்தப்படும் எனவும், இதற்காக, பிப்ரவரி 1 தேதி முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் TANCET மற்றும் CEETA நுழைவுத்தேர்வுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி TANCET தேர்வுக்காக  MCA ,MBA படிப்புகளுக்கு SC, ST, SC (A) பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு ரூ. 1000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CEETA தேர்வில் ME, M.Tech, M.Arch உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு SC, ST, SCA பிரிவினருக்கு 750 ரூபாயும், இதரபிரிவினருக்கு 1500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் http://tancet.annauniv.edu/tancet என்கிற இணையதளத்தில் உள்ளீடு செய்து கட்டணங்களை செலுத்த வேண்டும் எனவும் இதே இணையதள முகவரியில் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Anna University, Higher education