அடிப்படை கணிதம் பயின்ற மாணவர்கள் அறிவியல் பிரிவில் சேர விரும்பினால் கணிதத்தில் மாணவர்களின் திறனை அறிய சிறப்புத் தேர்வை பள்ளி அளவில் எழுத வேண்டும் என்றும் சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்தாம் வகுப்பில் standard mathematics பயின்ற மாணவர்கள் மட்டுமே பதினோராம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேர முடியும்.. என்பது சிபிஎஸ்இ-யின் நடைமுறையாகும். கொரோனோ பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் இந்த நடைமுறையில் தளர்வு அறிவித்து 10ம் வகுப்பில் அடிப்படை கணிதம் பயின்ற மாணவர்களும் 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேரலாம் என்று அனுமதி அளித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டது.
கொரொனோ பரவல் காரணமாக ஓராண்டிற்கு மட்டும் சிறப்பு வாய்ப்பாக இதனை வழங்குவதாக சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அந்த அனுமதியை ரத்து செய்வதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்பில் standard mathematics பயின்ற மாணவர்கள் மட்டுமே நடப்பு கல்வியாண்டில் பதினோராம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேர முடியும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
10ம் வகுப்பில் அடிப்படை கணிதம் பயின்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேர விரும்பினால் 11ஆம் வகுப்பு சேர்க்கையின்போது பள்ளி அளவில் கணிதத்திற்கான சிறப்பு தேர்வை எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.