முகப்பு /செய்தி /கல்வி / 10,12ம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் பழைய முறையில் தொடரும் - சிபிஎஸ்இ

10,12ம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் பழைய முறையில் தொடரும் - சிபிஎஸ்இ

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாணவர்களின் மனஉளைச்சலைக்  குறைக்கும் வகையில், 2023ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் உரிய விகிதத்தில் பாடஅளவு குறைக்கப்படும் - சிபிஎஸ்இ

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வரும் கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான வாரியத் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்த சிபிஎஸ்இ  முடிவெடுத்துள்ளாக  கூறப்படுகிறது. பெற்றோர்  மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கொரோனா முதலாவது பெருந்தொற்று அலை காரணமாக, 2020ம்  ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக, 2021 மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த 10,12-ஆம் வகுப்புகள் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

மீண்டும் அத்தகைய எதிர்பாராத சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, 2022 கலிவியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ முடிவெடுத்தது. அதனையடுத்து, முதல் அமர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.  இரண்டாம் அமர்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல் அமர்வில் வெறும் கொள்குறிவகை வினா விடையாக (MCQ) இருந்த நிலையில், இரண்டாம் அமர்வு எழுத்துத் தேர்வு வினாத்தாளில் புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருக்கும். மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு (Internal Assesment) அடிபப்டையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாரியத் தேர்வுகளை இரு அமர்வுகளாக நடத்தப்படும் வரும் கல்வியாண்டில் தொடருமா? என்ற கேள்வி பெற்றோர் மற்றும் மாணவர்களின் மறதியால் காணப்பட்டது.

மேலும், 2020 தேசிய கல்விக் கொள்கையில், 10,12ம் வகுப்களுக்கான வாரியத் தேர்வில் ஒன்று முதல் இரண்டு முறை வரை  மாணவர்கள் தேர்வு எழுதலாம் (one main examination and one for improvement) என்று குறிப்பிடப்பட்டுள்ளது . முதல் அமர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப இரண்டாவது அமர்வில் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக இரண்டு அமர்வுகள் கொண்ட தேர்வை சிபிஎஸ்இ நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இதுதொடர்பான தெளிவுரையை சிபிஎஸஇ தற்போது அறிவித்துள்ளது.  இரண்டு அமர்வுகள் கொண்ட நடைமுறை தொடராது என்றும், பழைய முறையிலேயே 10,12ம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் தொடரும் என்றும் தெரிவித்துளளது.  தற்போது, வகுப்புகள் வழக்கம் போல் முழுஅளவில் செயல்படத தொடங்கியுள்ளதால்  இந்த முடிவை சிபிஎஸ்இ  எடுத்துள்ளதாக தெரிகிறது.

இருப்பினும், மாணவர்களின் மனஉளைச்சலைக்  குறைக்கும் வகையில், 2023ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் உரிய விகிதத்தில் பாடஅளவு குறைக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ  தெரிவித்துளளது.

CBSE Class 10th Exam: சிபிஎஸ்இ அறிவியல் பாடத்துக்கான வினா வங்கி வெளியானது

First published:

Tags: CBSE, CBSE School lesson