சி.பி.எஸ்.இ. ஆசிரியர் தகுதித் தேர்வு: நவம்பர் 22 முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த மாதம் 9-ம் தேதி நாடு முழுவதும் 92 நகரங்களிலுள்ள 2,296 மையங்களில் நடைபெறுகிறது.

சி.பி.எஸ்.இ. ஆசிரியர் தகுதித் தேர்வு: நவம்பர் 22 முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்!
டிச. 9-இல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு
  • News18
  • Last Updated: November 21, 2018, 7:55 PM IST
  • Share this:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை நவம்பர் 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ. சார்பில் ஆண்டுதோறும் Central Teacher E2ligibility Test (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

நடப்பாண்டில் இந்தத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த மாதம் 9-ம் தேதி நாடு முழுவதும் 92 நகரங்களிலுள்ள 2,296 மையங்களில் நடைபெறுகிறது.


இரு தாள்களைக் கொண்ட இந்தத் தேர்வு, டிசம்பர் 9-ம் தேதி அன்று காலை, மதியம் என இரு வேளையும் நடைபெறும். இதற்கான நுழைவுச் சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் www.ctet.nic.in என்ற வலைதளத்திலிருந்து நாளை (நவம்பர் 22) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Also watch

First published: November 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்