முடங்கிய இணையதளம் - CBSE தேர்வு முடிவுகளை அறிவதில் சிக்கல்

CBSE தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதள பக்கத்தில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தேர்வு முடிவுகளை அறிவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முடங்கிய இணையதளம் - CBSE தேர்வு முடிவுகளை அறிவதில் சிக்கல்
(கோப்புப் படம்)
  • Share this:
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்சி தேர்வு எழுதியிருந்த நிலையில், cbseresults.nic.in  என்கிற இணையதள பக்கத்தில் முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என சிபிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இணையதள பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாணவர்கள் முடிவினை அறிந்து கொள்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.




இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்சி மாணவர்களுடைய மதிப்பெண் மற்றும் முடிவு விவரங்கள் மாணவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து முடிவினை தெரிந்து கொள்ளலாம் எனவும் இணைய தள பக்கத்தை சரி செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Also read... ஜியோவில் குவால்காம் முதலீடு - அதிநவீன 5 ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்பை மேற்கொள்ள முடியும்

தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக ஒரே நேரத்தில் முயற்சி செய்ததால் இணையதள பக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading