முகப்பு /செய்தி /கல்வி / 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு? - எச்சரிக்கும் சிபிஎஸ்இ

10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு? - எச்சரிக்கும் சிபிஎஸ்இ

மாணவிகள்

மாணவிகள்

மாணவர்கள்  பொய் அறிவிப்புகளை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டால்.  உரிய சட்ட / குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பாடத்திற்கான வினாத்தாள் வெளியானதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் உண்மையில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "  நடைபெற்று வரும் 2023ம்  கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகவும், வினாத்தாள் வைத்திருப்பதாவும் சில சமூக விஷமிகள் யுடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் போலியான அறிவிப்புகள் பரப்பி வருகின்றன. பணம் பறிக்க முயற்சிக்க இவர்களும் மாணவர்கள்/பெற்றோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

CBSE Exam Question paper leak
காட்சிப் படம்

இதுபோன்ற பொய் தகவல்களைப் பரப்பும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நோக்கில் சிபிஎஸ்இ வாரியம் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. டெல்லி சிறப்பு காவல் பிரிவுக்கு தொடரந்து தகவல் அளித்து வருகிறது. இதுபோன்று, மாணவர்கள்  பொய் அறிவிப்புகளை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டால்  உரிய சட்ட / குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது. பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்று பொய்த் தகவல்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

First published:

Tags: CBSE