முகப்பு /செய்தி /கல்வி / CBSE Class 10th Result 2022 | சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகிறது?

CBSE Class 10th Result 2022 | சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகிறது?

சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவு

சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவு

CBSE 10th Result 2022 | 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகளை வாரியம் இன்று மாலை 3 மணியளவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இன்று சிபிஎஸ்இ 10ம் வகுப்புபொதுத் தேர்வுக்கான முடிவுகளை மாலை 3 மணியளவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 2 பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் தேர்வு முடிகளை பார்த்துக்கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்குக் கிடைக்கும்

CBSE ஆல் பகிரப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு மொத்தம், 21,16,209 மாணவர்கள் CBSE Term 2 தேர்வில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். மொத்த மாணவர்களில் 8,94,993 பெண்கள் மற்றும் 12,21,195 ஆண்கள் ஆவர்.

அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் இந்த மாற்று முறைகளில் இருந்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

சி.பி.எஸ்.இ 10வது 12வது மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிடவும் -- cbse.gov.in, cbseresults.nic.in
  • CBSE வகுப்பு 10, 12 முடிவுகள் 2022 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ரோல் எண் அல்லது பிறந்த தேதி போன்ற தேவையான சான்றுகளை உள்ளிடவும்.
  • CBSE 2022 முடிவைச் சமர்ப்பித்து பதிவிறக்கவும்.

First published:

Tags: CBSE, CBSE School lesson, Education