CBSE 12ம் வகுப்பு வினா வங்கி வெளியீடு - டவுன்லோடு செய்வது எப்படி?

CBSE 12ம் வகுப்பு வினா வங்கி வெளியீடு - டவுன்லோடு செய்வது எப்படி?

மாதிரி படம்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ள சி.பி.எஸ்.இ, ஜூன் மாதத்தில் இதற்கான கூட்டம் நடத்தப்பட்டு தேர்வு குறித்து அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) தேர்வுக்கு தயாராகும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கியை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு சி.பி.எஸ்.சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ள சி.பி.எஸ்.இ, ஜூன் மாதத்தில் இதற்கான கூட்டம் நடத்தப்பட்டு தேர்வு குறித்து அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.

கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளநிலையில், மாணவர்களிடையே தேர்வு குறித்து அச்சம் மற்றும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதாவது, பாடத்திட்டம் மற்றும் வினா வங்கி குறித்து தெளிவான வரையறை வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.சி 12 ஆம் வகுப்புக்கான வினா வங்கியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. வேதியியல், கணிதம் உள்ளிட்ட 12 பாடங்களுக்கும் வினா வங்கி வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ இணையதளத்துக்கு சென்று மாணவர்கள் நேரடியாக தங்களுக்கு தேவையான வினா வங்கியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Also read... தேசிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு: தமிழ் மொழி புறக்கணிப்பால் சர்ச்சை

சி.பி.எஸ்.சி 12 ஆம் வகுப்பு 2021; பாடம் வாரியாக வினா வங்கி

1. Business Studies
2. Physical Education
3. Political Science
4. History
5. Sociology
6. English Core
7. Mathematics
8. Accountancy
9. Economics
10. Chemistry
11. Computer Science
12. Informatics Practices

வினா வங்கியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

1. சி.பி.எஸ்.இ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். http://cbseacademic.nic.in

2. முகப்பு பக்கத்தில் இருக்கும் ‘Question Bank’ என்ற ஆப்சனை தேர்தெடுத்து 12 (class XII) ஆம் வகுப்பை தேர்தெடுக்க வேண்டும்

3. தற்போது புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் பாடவாரியாக வினா வங்கி இருக்கும்.

4. அதில் உங்களுக்கு தேவையான வினா வங்கியை தேர்தெடுத்து, பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தேவை என்றால் பிரிண்ட் அவுட் கூட எடுத்துக்கொள்ளலாம்.

ஏப்ரல் மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை மிக வேகமாக பரவியதையடுத்து, தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என கல்வியாளர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டமும் 30 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: