10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

தேர்வு முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 24, 2018, 7:54 AM IST
  • Share this:
சி.பி.எஸ். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 5-ல் தமிழ் தேர்வும், 7, 13 ஆகிய தேதிகளில் கணிதம் மற்றும் அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது. மார்ச் 19-ம் தேதி ஹிந்தி மொழித் தேர்வும், 23-ம் தேதி ஆங்கிலமும், 29-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது.

இதேபோல், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி மார்ச் 2-ம் தேதி தொடங்கி, மார்ச் 28-ம் தேதி நிறைவடைகிறது. அதன்படி, மார்ச் 2, 5, 6 ஆகிய தேதிகள் முறையே ஆங்கிலம், இயற்பியல், கணக்குப் பதிவியல் தேர்வுகளும் நடைபெறுகிறது. வேதியியல் பாடத்திற்கான தேர்வு மார்ச் 12-ம் தேதியும், 14-ம் தேதி வணிகவியல் தேர்வும் நடைபெற உள்ளது. மார்ச் 15, 18, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், உயிரியல், கணிதம், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Also see...

First published: December 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்