10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையில் கற்றல் விளைவுகளை சோதித்துக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு முறையை பற்றிய ஒரு பரந்துபட்ட பார்வையை இந்த மாதிரி வினாத்தாள் அளிக்கும் என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குவதை உறுதி செய்யும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
cbseacademic.nic.in என்ற சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்லவும்.
முகப்புப் பக்கத்தில், 10,12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
மாதிரி வினாத்தாள்கள் இணைப்பைக் கொண்ட ஒரு pdf காட்டப்படும்
pdf-ஐ பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு:
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2021-22 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா நோய்த் தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், மீண்டும் பழைய முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டு முதல் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை 'ஆண்டு இறுதித் தேர்வு' (Annual Examination) என்ற பழைய முறையில் நடத்தப்படும். அதன்படி, வரும் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொது தேர்வை 2023, பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தொடங்க வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதையும் வாசிக்க: இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது - பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு
மேலும், 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டடத்தில் இருந்த பாடத்திட்டங்கள் தொடரும் என்றும், குறிப்பிட்ட சில தலைப்புகளில் மட்டும் மாற்றம் இருக்கும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.