முகப்பு /செய்தி /கல்வி / சிபிஎஸ்இ 12ம் வகுப்பு- மதிப்பெண்களில் திருப்தி இல்லையா? மறுகூட்டலுக்கு விண்ணப்பியுங்கள்

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு- மதிப்பெண்களில் திருப்தி இல்லையா? மறுகூட்டலுக்கு விண்ணப்பியுங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

விடைத்தாள்‌ நகல்‌ பெற்றவர்கள்‌ ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை விடைத்தாள்‌ மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விடைத்தாள்‌ நகல்‌  மற்றும் மறுகூட்டல்‌ கோரி சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

கடந்த 22ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 92.71%  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 95 சதவீதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களையும், 1 லட்சத்து 34 ஆயிரம் மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் கூடுதலாக மதிப்பெண்களையும் பெற்றனர்.

இந்நிலையில், வழங்கப்பட்ட தேர்வு மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் மறுகூட்டல்/மறுமதிப்பீடு முறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

அதன்படி, 26.07.2022 (செவ்வாய்கிழமை) முதல்‌ 28.07.2022 ( வியாழக்கிழமை) மணி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்‌.  ஒவ்வொரு பாடநெறிக்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500  செலுத்த  வேண்டும். 

அதன் பின், ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விடைத்தாள்‌ நகல்‌ கேட்டு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்கு, ஒவ்வொரு பாடத்திற்கும்‌ - ரூ.700/ கட்டணமாக வசூலிக்கப்படும்.

விடைத்தாள்‌ நகல்‌ பெற்றவர்கள்‌ ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை விடைத்தாள்‌ மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கு, ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.100/- கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்க: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்தாண்டு,முதல் அமர்வுக்கு 30% முக்கியத்துவமும், இரண்டாவது அமர்வுக்கு 70% முக்கியத்துவமும் கொண்டு 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண் பட்டியல் சிபிஎஸ்இ தயாரித்தது.

இருப்பினும், இரண்டு அமர்வுகளில் ஏதேனும் ஒரு அமர்வின் போது

  • கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்;
  • தேசிய/சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள்;
  • சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள்;
  • தனிமைப்படுத்திக் கொண்ட மாணவர்கள்
  • கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருந்த மாணவர்கள்

ஆகிய சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் ஏதேனும் ஒரு அமர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.

First published:

Tags: CBSE