CBSE & ICSE தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் படிப்பதற்கும், படித்ததைச் சரிபார்ப்பதற்கு உதவும் வகையில் செயல்படும் செயலியாக Topper Learning Exam App உள்ளது. சுமார் 1 லட்சம் மாணவர்கள் இந்த செயலியைப் பயனுள்ளதாகக் கருதுகின்றனர். பாடங்கள் பற்றிய தெளிவான விளக்கம் மற்றும் தயாராகும் முறை, கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய விதம் போன்றவற்றையும் இந்த செயலி எளிமையாகக் கற்பிக்கிறது. கல்வியில் சிறப்பானதாக இந்த செயலில் திகழ்கிறது.
இதில் தேர்வுக்கான வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை வைத்து மாணவர்கள் தங்கள் ஆற்றலை அறிந்துகொள்ளலாம். மேலும் தேர்வுக்கு தயாராவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மாணவர்களுக்குப் பள்ளிக்கு அடுத்த நண்பனாக Topper Learning Exam App இருக்கிறது. மாணவர்களுக்கு எழுப்பும் சந்தேகங்களுக்கு நொடியில் விடைகளைத் தருகிறது. அதே போல் கடினமாகக் கேள்விகளுக்கான விடைகளை எளிமையாக மாணவர்களுக்கு எடுத்து உரைக்கிறது.
தேர்வு பயத்தை எதிர்கொள்ளும் வகையில் ஆன்லைனில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், சமூக அறிவியல், வரலாறு, புவியியல், பொறியியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்குத் தேர்வு எழுதி தயாராகலாம். மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி இலக்கணங்களுக்கான ஆன்லைன் தேர்வும் இதில் இடம்பெற்றுள்ளது.
Topper Learning Exam App-இல் உள்ள பாடங்களுக்கான குறிப்புகள், தேர்வுக்கான குறிப்புகள், விடையளிக்கப்பட்ட கேள்விகள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் தலைப்புவாரியான தேர்வு தயாரிப்பு போன்றவற்றின் மூலம் மாணவர்கள் அளவில்லாமல் பயிற்சி எடுக்கலாம். முதன்மையான கல்வியாளர்களால் தயார் செய்யப்பட்டதால், மாணவர்களில் செயல் திறன்களுக்கான சான்றிதழ் மற்றும் எழும் சந்தேகங்களுக்கான உடனடி பதில்கள் கிடைக்கிறது.
CBSE & ICSE தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு முதலில் எங்கிருந்து தொடங்குவது என்பது கடினமாக இருக்கும். பாடத் திட்டத்தையும், கேள்விகள் அமைப்பையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். துரிதமான யுத்திகள், சரியான குறிப்புகள், கவனம் கொள்ள வேண்டிய முக்கிய தலைப்புகள் எவை போன்றவற்றில் கவனம் தேவை. அதே போல், பல முறை சுய தேர்வுகள் மேற்கொண்டு தவறுகளைத் திருத்திக் கொள்வது அவசியம். இதை எல்லாம் வேறு நபரின் உதவி இன்றி எளிமையான முறையில் ஒரு செயலி மாணவர்களுக்கு அளிக்கிறது என்றால் அது கண்டிப்பாக மாணவர்களின் நண்பன் தான். அப்படிப்பட்ட ஒரு செயலி தான் Topper Learning Exam App. தேர்வில் வெற்றி பெற இலவசமாக பிளே ஸ்ரோரில் இருந்து உடனே பதிவிறக்கம் செய்து இன்றே தொடங்குங்கள். மாணவர்கள் சிறகை விரித்துப் பறக்க இதுவே முதல் படியாக இருக்கட்டும்.
Topper Learning Exam App செயலியைப் பதிவிறக்கம் செய்ய : https://play.google.com/store/apps/details?id=com.topperlearning.toppertest
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apps, Exam preparation