பொதுப்பிரிவுக்கு 2 மடங்கு... பட்டியலின மாணவர்களுக்கு 24 மடங்கு...! தேர்வுக்கட்டணத்தை உயர்த்திய சி.பி.எஸ்.இ.!

news18
Updated: August 12, 2019, 1:15 PM IST
பொதுப்பிரிவுக்கு 2 மடங்கு... பட்டியலின மாணவர்களுக்கு 24 மடங்கு...! தேர்வுக்கட்டணத்தை உயர்த்திய சி.பி.எஸ்.இ.!
கோப்புப்படம்
news18
Updated: August 12, 2019, 1:15 PM IST
மத்திய கல்விவாரியமான சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தை 50 ரூபாயிலிருந்து ரூ.1,200 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு ரூ.750-லிருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தியுள்ளது.

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தேர்வு முறையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் போதே பதிவு செய்ய வேண்டும், அதே போல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும்.

கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக் கட்டண விவரங்களை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ஏற்கனவே சி.பி.எஸ்.இ பள்ளிகள் பழைய கட்டணங்கள் மூலம் பதிவுகளை தொடங்கிவிட்ட நிலையில், இப்போது புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணத்துக்குரிய வித்தியாசத்தை மாணவர்களிடம் இருந்து இனிமேல் பள்ளிகள் வசூலிக்கும்.


சி.பி.எஸ்.இ. வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக்கட்டணத்தின்படி, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் இனிமேல் 5 பாடங்களுக்கு ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன் அவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தினர். ஏறக்குறைய 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர் இதற்கு முன் ரூ.750 கட்டணம் செலுத்திய நிலையில் இனிமேல் ரூ.1500 கட்டணம் 5 பாடங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த கட்டணம் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

12-ம் வகுப்பு எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 5 பாடங்கள் தவிர கூடுதல் பாடத்துக்கு கட்டணம் ஏதும் இதற்கு முன் செலுத்த தேவையில்லை. ஆனால் இனிமேல் ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் ரூ. 300 கட்டணமும், பொதுப்பிரிவினர் இதற்கு முன் கூடுதல் பாடத்துக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அவர்கள் ரூ. 300 செலுத்த வேண்டும்.

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...