சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கான சில டிப்ஸ்...!

மாதிரிப் படம்

பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்று வருகின்றனர். இதனால் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

  மேலும் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளிகள் செய்முறைத் தேர்வுகளை மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்குகின்றன. நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2021 https://www.cbse.gov.in/newsite/index.html இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

  தேர்வுகள் தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரி செய்து தேர்வுக்கு தயாராக போதுமான நேரம் இருக்கிறது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கான சிறப்பான வழிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

  தினசரி வழக்கத்தை உருவாக்கவும்

  பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வாரியத் தேர்வுகளுக்குத் தயாராகும் போது தேர்வுக்கு முந்தையை நாள் நள்ளிரவு வரை படித்து கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றிலிருந்தே உங்கள் நாளை சரியாக நீங்கள் திட்டமிட்டு வந்தால் கடைசி நேரத்தில் மன அழுத்தம் இன்றி இருக்கலாம். தேர்வுக்கு தயாராகும் நாள் முதல் வாரம் 7 நாள் அட்டவணையை உருவாக்க வேண்டும். உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒரு நாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள், படிப்பதற்கு, இடைவெளி என அனைத்திற்கும் அட்டவணையை உருவாக்கவும். ஒவ்வொரு நாளிலும் அனைத்து பாடங்களின் ஒரு அத்தியாயம் அல்லது ஒரு நாளில் ஒரு பாடம் என நீங்கள் உங்கள் விருப்பப்படி திட்டமிட்டு கொள்ளலாம். அதேபோல கடினமாக இருக்கும் பாடங்களை படித்து முடிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளுங்கள். மிக முக்கியமாக, உங்கள் உணவு, தூக்கம் ஆகியவற்றிக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும், எனவே, இவை அனைத்தையும் உங்கள் அட்டவணையில் போதுமான அளவு இடமளிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  மைண்ட் மேப்

  உங்கள் நேரத்தைச் சேமிக்க சில நுட்பமான விஷயங்களை கற்றுக்கொள்வது அவசியம். சிறப்பாகவும், வேகமாகவும் படிக்க பல்வேறு நுட்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘போமோடோரோ’ என அழைக்கப்படுகிறது, இது அறிவாற்றல் சுறுசுறுப்பை அதிகரிப்பதில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நுட்பத்தில் 25 நிமிடங்கள் படிக்க வேண்டும், அதைத் தொடர்ந்து ஒரு குறுகிய இடைவெளியும், மீண்டும் 25 நிமிடம் படிப்பதும் அவசியம். மேலும் நீங்கள் படித்தவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு நுட்பம் மைண்ட் மேப்பிங் ஆகும். இது உங்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள உதவும், ஒரு காட்சி கருவியாகும். நீங்கள் நினைவில் கொள்வது கடினமாக இருக்கும் தலைப்புகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்துவது நல்லது.

  எழுத்து பயிற்சி :

  உங்கள் கையெழுத்து தான் தேர்வு தாள் திருத்துபவருக்கு ஒரு நல்ல எண்ணத்தை உருவாகும் என்பதால் தேர்வுக்கு தயாராகும் போது எழுத்து பயிற்சி அவசியம். பல மாணவர்கள் நன்கு படித்திருந்தாலும், சரியான நேரத்திற்குள் எழுதி முடிக்காமல் திணறுவார்கள். எனவே, வீட்டில் எழுதி பழகுவது அவசியம். தேர்வுக்கு நீங்கள் தயாராகும் போது, வாரத்திற்கு ஒரு முறையாவது மூன்று மணி நேரம் எழுதி பழகுங்கள்.

  Also read... நீட் தேர்விற்காக தமிழகத்தில் கூடுதலாக தேர்வு மையங்களை அமைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு...!

  கேள்வி வாசிப்பில் கவனம் தேவை :

  தேர்வு அறையில் கேள்விகளைப் படிக்க மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். கேள்விகளை படித்து சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே உங்களால் சரியான பதிலை எழுத முடியும். எளிதான மற்றும் வேகமாக முடிக்க கூடிய கேள்விகளை முதலில் தேர்ந்தெடுத்து எழுதுங்கள். அப்போது தான் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும்.

  உங்கள் பதில்களை சுருக்கமாக எழுதவும்

  தங்களுக்கு பிடித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மாணவர்கள் பெரும்பாலும் அதிகமான பதில்களை எழுதுவார்கள். சரியான நேரத்தில் தேர்வை முடிக்க முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, உங்கள் பதில்கள் சுருக்கமாகவும் மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கேள்விக்கு மட்டும் நீங்கள் நிறைய நேரம் செலவிட்டால், மற்ற கேள்விக்கான விடைகளை எழுத தேவையான நேரம் கிடைக்காது என்பதால் கவனமாக இருங்கள்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: