முகப்பு /செய்தி /கல்வி / சி.பி.எஸ்.இ 10, 12 தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியீடு...!

சி.பி.எஸ்.இ 10, 12 தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியீடு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

  • 1-MIN READ
  • Last Updated :

சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடப்படுகிறது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு, பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 14 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால்,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும், ஒன்பது மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள், பருவத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பொதுத்தேர்வுக்கான அட்டவணை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

First published:

Tags: CBSE, Lockdown