ஆன்லைன் வகுப்புகளின் காலம்: மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு கையேடுகளை வழங்குகிறது சிபிஎஸ்இ

மனநலனும் புகழுக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் ஆன்லைன் பயன்பாட்டு வழிகளை கையேட்டில் அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது சிபிஎஸ்இ.

ஆன்லைன் வகுப்புகளின் காலம்: மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு கையேடுகளை வழங்குகிறது சிபிஎஸ்இ
சைபர் பாதுகாப்பு - ஆன்லைன் வகுப்புகள்
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலையொட்டி பொது முடக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளும் மாணவர்களும் பழகத் தொடங்கியிருக்கிறார்கள். பள்ளிகள் வழக்கமான நிலையை அடையும் வரை ஆன்லைன் பாடங்களை எடுத்துவரும் நிலைக்காக, மாணவர்களுக்கான பிரத்யேக சைபர் பாதுகாப்புக் கையேட்டு ஆவணங்களை 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனுப்பியிருக்கிறது சிபிஎஸ்இ.

சிபிஎஸ்இ வழங்கியிருக்கும் இந்த கையேட்டில், Revenge Pornography என்னும் தவறான புகைப்பட, வீடியோ பயன்பாடு, பழிதீர்க்கும் செயல்கள், ஆன்லைன் நட்புகள், சம்மதமின்றி வெளியாகும் தகவல், ப்ளாக்மெயில் செயல்பாடுகள், எல்லை மீறுதல் போன்ற பல முக்கிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

மாணவர்கள், பதின் பருவத்தினர் எதிர் பாலினத்தவர்களுடன் மதிப்புடன் பழகவேண்டும். அவர்களை மனிதர்களாக மதிப்பதுடன், சம மதிப்பை அளிக்க வேண்டும். அவர்களை மனிதர்களாக பார்க்கவேண்டும், பொருட்களாகவோ ஆசைகளாகவோ அல்ல என்று சிபிஎஸ்இ ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


பகிரத் தேவையற்ற புகைப்படங்களால் மாணவர்களின் மனநலன் பாதிப்புக்கு உள்ளாகலாம். ஒருமுறை ஆன்லைனில் பகிரப்பட்டுவிட்டால், அதன் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குறியாகும் என்பதால், மனநலனும் புகழுக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் ஆன்லைன் பயன்பாட்டு வழிகளை கையேட்டில் அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது சிபிஎஸ்இ.
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading