முகப்பு /செய்தி /கல்வி / CBSE WEIGHTAGE: இரண்டாவது அமர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்த சிபிஎஸ்இ

CBSE WEIGHTAGE: இரண்டாவது அமர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்த சிபிஎஸ்இ

CBSE Board 12 Results 2022 MarK Weightage: கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏதேனும் ஒரு அமர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு , மற்றொரு அமர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

CBSE Board 12 Results 2022 MarK Weightage: கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏதேனும் ஒரு அமர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு , மற்றொரு அமர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

CBSE Board 12 Results 2022 MarK Weightage: கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏதேனும் ஒரு அமர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு , மற்றொரு அமர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முதலாவது அமர்வுக்கு 30% முக்கியத்துவமும், இரண்டாவது அமர்வுக்கு 70% முக்கியத்துவமும் கொண்டு 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. முன்னதாக, 12ம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டது.14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 % ஆகும்.

இதையும் வாசிக்க: CBSE 12th class results announced: சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு -சென்னையில் 97.79% பேர் தேர்ச்சி

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ   12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு  சிறப்பு மதிப்பெண் வழங்கும் திட்டத்தின் மூலம் வாரியத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ அறிவித்து வந்தது.

2020-21 கல்வியாண்டிலும்  இத்தகைய சூழலைத்  தவிர்க்க, 12ம் வகுப்பு வாரியத் தேர்வை, இறுதி ஆண்டுத் தேர்வாக நடத்தமால் (Annual Examination)இரண்டு அமர்வுகளாக (Special Academic Session - I) சிபிஎஸ்இ நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.

இதனையடுத்து, இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் பணிகள் குறித்து  தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், பள்ளித் தலைவர்கள், கல்வியாளர்கள் என பலரிடத்திலும் சிபிஎஸ்இ கருத்துக்களைக் கேட்டு வந்தது. இதனடிப்படையில், முதல் அமர்வுக்கு 30% முக்கியத்துவமும், இரண்டாவது அமர்வுக்கு 70% முக்கியத்துவமும் கொண்டு 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்க சிபிஎஸ்இ முடிவெடுத்தது. இந்த விகிதாச்சார அடிப்படையில் தான் இன்றைய தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன. செய்முறைத் தேர்வுகளைப் பொறுத்த வரையில்,    இரண்டு அமர்வுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கCBSE 12 Results Out: மாணவர்களை விட மாணவிகள் சுமார் 3.29% அதிகமாக தேர்ச்சி

இருப்பினும், இரண்டு அமர்வுகளில் ஏதேனும் ஒரு அமர்வின் போது

  • கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்;
  • தேசிய/சர்வதேச விளையாட்டுப்  போட்டிகளில்  கலந்து கொண்ட மாணவர்கள்;
  • சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள்;
  •   தனிமைப்படுத்திக் கொண்ட மாணவர்கள்
  • கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருந்த மாணவர்கள்
  • ஆகிய சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் ஏதேனும் ஒரு அமர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

First published:

Tags: CBSE