முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல்,கலை அறிவியல் படிப்புகளுக்கு வரும் 27ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை

பொறியியல்,கலை அறிவியல் படிப்புகளுக்கு வரும் 27ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை

காட்சிப் படம்

காட்சிப் படம்

CBSE Board 12 Results 2022: உயர்கல்வி சேர்க்கையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இடமில்லை என்று கூறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - உயர்கல்வித்துறை எச்சரிக்கை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர இதுவரை 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக வரும் 27-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கCBSE WEIGHTAGE: இரண்டாவது அமர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்த சிபிஎஸ்இ

உயர்கல்வி மாணவர் சேர்க்கை தாமதமாவதைத் தவிர்க்க, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தந்த அழுத்தம் காரணமாகவே, இன்று முடிவுகள் வெளியாகியிருப்பதாகவும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்க: இன்று முதல் 5 நாட்கள் வரை பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இடமில்லை என்று எந்த தனியார் கல்லூரியும் மறுக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும்" என்று தெரிவித்திருந்தார்.

First published:

Tags: CBSE, College Admission