முகப்பு /செய்தி /கல்வி / CBSE 12 Results Out: மாணவர்களை விட மாணவிகள் சுமார் 3.29% அதிகமாக தேர்ச்சி

CBSE 12 Results Out: மாணவர்களை விட மாணவிகள் சுமார் 3.29% அதிகமாக தேர்ச்சி

காட்சிப் படம்

காட்சிப் படம்

CBSE Board 12 Results 2022: தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்த வரையில்,97.79 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பல நாட்கள் எதிர்பார்த்த சிபிஎஸ்இ 12ம்  முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதமாகும்.  2019, 2020 கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. கடந்தாண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டுக்கான வாரியத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது.

பிராந்தியம் வாரியாக: 

98.83% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் பிராந்தியம் முதல் இடத்தையும், 98.16% விகிதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 97.79 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.  அதேபோன்று, நொய்டா, டேராடூன், பிரக்யராஜ் ஆகிய பிராந்தியங்கள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

பாலின தேர்ச்சி விகிதம்: 

மாணவர்களை விட மாணவிகள் சுமார் 3.29% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாலின வாரியாக தேர்ச்சி விகிதம்
பாலினம் 20212022 மாணவர்களை விட மாணவிகள் சுமார் 3.29% அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர்.
மாணவிகள்99.6794.54
மாணவர்கள்99.1391.25
பால் புதுமையினர்100100

சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் கொண்ட பல்வேறு கல்வி அமைப்புகளின் தேர்ச்சி விகிதங்கள்

InstitutionsPass %
1ஜவஹர் நவோதயா பள்ளி98.93
2கேந்திர வித்யாலயா97.04
3மத்திய திபெத் பள்ளிகள்97.96
4அரசு பள்ளிகள்93.38
5அரசு உதவி பெறும் பள்ளிகள்94.81
6தன்னாட்சி பள்ளிகள்92.20

கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விவரம்:

90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பற்ற மாணவர்கள்மொத்த தேர்ச்சி விகிதத்தில் 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விகிதம்95 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பற்ற மாணவர்கள்மொத்த தேர்ச்சி விகிதத்தில் 95 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விகிதம்
மொத்த தேர்வர்கள்1347979.39334322.33

சிபிஎஸ்சி, தேர்வு முடிவுகளில், “தேர்ச்சி அடையவில்லை” என்ற சொற்றொடரை நீக்கி விட்டு “திரும்பவும் எழுதுவது அவசியம்” என்ற சொற்றொடரை சேர்க்கத்தீர்ன்மணிக்கப்பட்டுள்ளது. எனவே சிபிஎஸ்சி மாணவர்களுக்கு அளிக்கும் ஆவணங்களிலும், அதன் இணையதளத்திலும், “தேர்ச்சி அடையவில்லை” என்ற சொற்றொடர் இடம் பெறாது.

First published:

Tags: CBSE