உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கணக்கில் கொண்டு, 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கொரோனா முதலாவது பெருந்தொற்று அலை காரணமாக, 2020ம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக, 2021 மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த 10,12-ஆம் வகுப்புகள் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
மீண்டும் அத்தகைய எதிர்பாராத சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, 2022 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக (Special Academic Session 2021-22) சிபிஎஸ்இ நடத்தி முடித்தது. அதற்கான, தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. முதலாவது அமர்வுக்கு 30% முக்கியத்துவமும், இரண்டாவது அமர்வுக்கு 70% முக்கியத்துவமும் கொண்டு 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்தது.
இதையும் வாசிக்க: CBSE WEIGHTAGE: இரண்டாவது அமர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்த சிபிஎஸ்இ
இந்நிலையில், உலகளவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்து வருவதாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், இனிவரும் காலங்களில் பழைய முறையில் (ஆண்டு இறுதித் தேர்வு முறையில் - Annual Examination Pattern) 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ முன்னதாக தெரிவித்திருந்தது. இருப்பினும், மாணவர்களின் மனஉளைச்சலைக் குறைக்கும் வகையில், இந்த (2023ம்) ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் உரிய விகிதத்தில் பாடஅளவு குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: CBSE 12 Results Out: மாணவர்களை விட மாணவிகள் சுமார் 3.29% அதிகமாக தேர்ச்சி
இந்நிலையில், இந்த கல்வியாண்டிற்கான வாரியத் தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. அறிவிப்பில், " உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், வரும் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொது தேர்வை 2023, பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தொடங்க வாரியம் முடிவெடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBSE