முகப்பு /செய்தி /கல்வி / CBSE 10th Results Declared : 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது

CBSE 10th Results Declared : 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது

மாதிரி படம்

மாதிரி படம்

CBSE Board 12 Results 2022: சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம்

  • 1-MIN READ
  • Last Updated :

சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 92.71% ஆகும்.  கொரோனா தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை விட (2020,2019) இந்தாண்டு தேர்ச்சி விகிதங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 4 ஆண்டு காலத்தில்10ம் வகுப்பு12ம் வகுப்பு
202294.40%92.71%
202199.04%99.37%
202091.46%88.78%
201991.10%83.40%

சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். இதற்கான இணையதளம் cbse.nic.in , cbseresults.nic.in ஆகும். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக , 10ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வினை, இரு பருவத் தேர்வுகளாக நடத்தியது. கடந்த ஆண்டு ஜூலை 1,0 வகுப்புக்கான முதல் பருவத் தேர்வு நடைபெற்றது. இதற்கான, முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இரண்டாம் பருவத் தேர்வுகள் இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதற்கான, முடிவுகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் போன்று, முதலாவது அமர்வுக்கு 30% முக்கியத்துவமும், இரண்டாவது அமர்வுக்கு 70% முக்கியத்துவமும் கொண்டு 10ம் வகுப்பு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

https://cnr.nic.in/CBSEResults/class10-2022/Class10th22.htm,

https://testservices.nic.in/cbseResults2022/class10-2022/Class10th22.htm

https://cbseresults.nic.in/class-tenth/class10th22.htm

ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்.

First published:

Tags: CBSE