முகப்பு /செய்தி /கல்வி / சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாகிறது?

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாகிறது?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

cbseresults.nic.in, results.digitallocker.gov.in, cbse.gov.in -ல் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 3 மணி அளவில் வெளியிடப்படும் என்  தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ  அறிவிப்பை சிபிஎஸ்இ கல்வி வாரியம் இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை. எனவே ,சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்ளுமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக ,  10ம் வகுப்பு  ஆண்டு இறுதி தேர்வினை, இரு பருவத் தேர்வுகளாக நடத்தியது. கடந்த ஆண்டு ஜூலை 1,0 வகுப்புக்கான முதல் பருவத் தேர்வு நடைபெற்றது. இதற்கான, முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இரண்டாம் பருவத் தேர்வுகள் இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதற்கான, முடிவுகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12ம் வகுப்புத்  தேர்வு முடிவுகள் போன்று, முதலாவது அமர்வுக்கு 30% முக்கியத்துவமும், இரண்டாவது அமர்வுக்கு 70% முக்கியத்துவமும் கொண்டு 10ம் வகுப்பு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்க:   CBSE WEIGHTAGE: இரண்டாவது அமர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்த சிபிஎஸ்இ

மேலும், ஏதேனும் ஒரு அமர்வின் போது,    கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்; தேசிய/சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள்; சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள்; தனிமைப்படுத்திக் கொண்ட மாணவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருந்த மாணவர்கள் ஆகிய சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் ஏதேனும் ஒரு அமர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

பெற்றோர் மற்றும் மாணவர்கள் cbseresults.nic.in, results.digitallocker.gov.in, cbse.gov.in -ல் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதையும் வாசிக்க:    பொறியியல்,கலை அறிவியல் படிப்புகளுக்கு வரும் 27ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை

முன்னதாக, 12ம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டது.14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 % ஆகும்.

First published:

Tags: CBSE