சிபிஎஸ்இ 10ம் வகுப்பின் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண ஆர்வமாக உள்ளனர்.
சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது.
முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.
மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு (Internal Assesment) அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.
Please consider #BestOfEitherTermsSubjectWise#CBSEgiveBestOfEitherTerms #BestOfEitherTerms#12thResult2022 #cbseboardexams2022 #CBSEResults#CBSEResult #cbseterm2 #cbse#JUSTICEforNEETUG #JusticeForCBSEstudents2022 pic.twitter.com/W8laCR6Mwr
— RUTVIK PATEL (@realrutvikpatel) June 26, 2022
Each and every Student of #CBSE want SubjectWiseBestOfEitherTerms It is only way to make fair results for 2021-2022 batch students, as they suffered most in this pandemic.@PMOIndia @cbseindia29#BestOfEitherTerms #BestOfEitherTermsSubjectWise #CBSEResults #cbseterm2 pic.twitter.com/ZcXz7ZbFL4
— Ronnie (@rony0109H) July 2, 2022
இருப்பினும், சிறந்த செயல் திறன் அடிப்படையில் ஏதேனும் ஒரு அமர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், வரும் கல்வியாண்டு முதல் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை 'ஆண்டு இறுதித் தேர்வு' (Annual Examination) என்ற பழைய முறையில் நடத்த சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது
12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: 12ம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBSC Exam Results, CBSE