சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2021 அட்டவணை வெளியீடு!

மாதிரி படம்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஆஃப்லைனில் நடக்கும்  என்றாலும், தேர்வுகளுக்கு முன்னர் மாணவர்கள் வகுப்புகளில் அமர முடியாவிட்டால் மாற்று வழிகளை ஆராய்வோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் சந்திக்கும் சிரமங்களை மனதில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.  

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2021  https://www.cbse.gov.in/newsite/index.html இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெற உள்ளது.  

மேலும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ போர்டு தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 10க்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 10,12 வகுப்பு தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 

Also read... போலி நீட் சான்றிதழ் அளித்ததாக கைது செய்யப்பட்ட மாணவி, அவரது தந்தைக்கு ஜாமீன்...!

தேர்வு அட்டவணைகளை சரிபார்க்கும் வழிமுறை: 

படி 1: https://www.cbse.gov.in/newsite/index.html என்ற வலைத்தளத்திற்கு செல்லவும். 

படி 2: முகப்புப்பக்கத்தில், ‘வகுப்பு 10 மற்றும் வகுப்பு 12’ என்ற விருப்பத்தை  காண்பீர்கள்.  

படி 3: அதனை கிளிக் செய்தால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை திரையில் தோன்றும்

படி 4: உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த அட்டவணையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

சிபிஎஸ்இ தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஆஃப்லைனில் நடக்கும்  என்றாலும், தேர்வுகளுக்கு முன்னர் மாணவர்கள் வகுப்புகளில் அமர முடியாவிட்டால் மாற்று வழிகளை ஆராய்வோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: