சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

மாதிரிப் படம்

CBSE Exam 2021 | ட்விட்டர் நேரலையில் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு தேதிகளை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.

 • Share this:
  சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021 மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 10-ம் தேதி முடிவடையும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

  கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் பிப்ரவரி வரை நடத்துவது முடியாத காரியம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

  இந்நிலையில் ட்விட்டர் நேரலையில் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு தேதிகளை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். செயல்முறை தேர்வுகள் மார்ச் முதல் தேதி தொடங்கும். எழுத்துத் தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 10-ல் முடியும் என கூறினார். தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியிடப்படும் என்றார். விரிவான அட்டவனை இணையதளத்தில் விரைவில் பதிவேற்றப்படும்.

   
  Published by:Vijay R
  First published: