மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பெற்றோர்கள் & மாணவர்களுக்கு CBSE எச்சரிக்கை

CBSE அதிகாரிகள் போல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அணுகும் நபர்களை நம்ப வேண்டாமென்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பெற்றோர்கள் & மாணவர்களுக்கு CBSE எச்சரிக்கை
சி.பி.எஸ்.இ
  • Share this:
CBSE பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்  மற்றும் அவர்களின்  பெற்றோர்களை சிலர் CBSE அதிகாரிகள் போர்வையில் மோசடி செய்யும் நோக்கத்தில் அணுகி  பாடங்களில் கூடுதல்  மதிப்பெண் பெற உதவி செய்வதாக வந்த புகாரை அடுத்து CBSE மாணவர்களை எச்சரிக்கை செய்துள்ளது.

அதுபோன்று யாரேனும் அனுகினால் அவர்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மோசடி நபர்களிடம் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும்  CBSE வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் மதிப்பெண் பெறும் ஆசையில் மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.என்றும் அவ்வாறு மோசடி நபர்களை நம்பி ஏமாற்றம் அடைந்தால் அதற்கு CBSE பொறுப்பாகது என்றும் விளக்கம் அளித்துள்ளது.First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading