CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. பத்தாம் வகுப்புகளுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்பு பாடங்களுக்கான தேர்வு இன்று தொடங்குகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பாடத்தேர்வு இன்று தொடங்க உள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 21,86, 940 பேர் தேர்வெழுதகின்றனர். இதில், 12,47, 364 பேரும், மாணவிகள் 9, 39, 566 பேரும், இதர பிரிவினர் 10 பேரும் தேர்வெழுத உள்ளனர். நாடு முழுவதும் 7,240 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 24,491 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். 76 பாடங்களுக்கு 16 நாட்களுக்கு நடைபெறும் தேர்வு மார்ச் 21ந் தேதி முடிவடைய உள்ளது.
12ம் வகுப்பு பொறுத்த வரையில், மொத்தம் 16, 96, 770 பேர் தேர்வெழுதிகின்றனர். இதில், மாணவர்கள் 9,51,332 பேரும், மாணவிகள் 7,45, 433 பேரும் உள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் 6,759 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 115 பாடங்களுக்கு 36 நாட்கள் தேர்வு நடைபெறுகிறது இத்தேர்வுகள் ஏப்ரல் 5 ந் தேதி முடிவடைய உள்ளது.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
இரு தரப்பு மாணவர்களுக்கும் காலை 10 முப்பது மணிக்கு தொடங்கி, பகல் 12.30 வரை தேர்வு நடைபெறவுள்ளது. சில தேர்வுகள் 1.30 மணி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்றும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மேற்கண்ட விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBSE