முகப்பு /செய்தி /கல்வி / பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் அதிகரிக்கும் கொரோனா... சிபிஎஸ்இ மாணவர்கள் புதிய கோரிக்கை

பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் அதிகரிக்கும் கொரோனா... சிபிஎஸ்இ மாணவர்கள் புதிய கோரிக்கை

தேர்வு  - மாதிரிப்படம்

தேர்வு - மாதிரிப்படம்

மாணவர்களின் உடல் நல பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பது குறித்து கவலை எழுந்துள்ளது.

கொரோனா தொற்றுகள்  டெல்லியில் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதனால், மாணவர்களின் உடல் நல பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பது குறித்து கவலை எழுந்துள்ளது.

இத்தகைய சூழலில், தேர்வுகளை ஹோம் சென்டரில் நடத்த வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் டிவிட்டர் மூலமாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மனோஜ் குமார் என்ற மாணவர் வெளியிட்டுள்ள பதிவில், “20221 - 2022 கல்வியாண்டில் நடைபெற உள்ள இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களிடம் இருந்து தொற்று பரவி, அதன் மூலமாக தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்று கூறியுள்ளார். அவரது பதிவில், “எங்கள் பள்ளியில் பணியாற்றும் அனைத்து கண்காணிப்பாளர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவேளை இளம் மாணவர்களில் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டு, அவர்கள் மூலமாக இந்த மூத்தவர்களுக்கு நோய் பரவி அவர்கள் இறக்க நேரிடும் பட்சத்தில் மாணவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டு விடும்.

Also Read : தமிழகத்தில் பள்ளிகளை ஒரு வாரத்திற்கு மூடிபோராட்டம் அறிவிப்பு

அதே சமயம், கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில், தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களை தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பது குறித்தும், மற்ற மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் தேர்வு வாரியங்கள் சார்பில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை டேக் செய்து மற்றொரு பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்றுவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில், கொரோனா தொற்றுகள் அதிகரிக்கக் கூடும். ஆகவே, ஹோம் சென்டர்களில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் கவலை

கொரோனா சூழல் குறித்து பெற்றோர்கள் ஊடகங்களிடம் பேசுகையில், பள்ளி மையங்களில் முறையான கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் இல்லாதது, சானிடைசர் ஏற்பாடு இல்லாதது போன்ற பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன. தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் பயணம் செய்யும்போது அவர்களுக்கு தொற்று பரவக் கூடும். ஆகவே, பலரும் கோரிக்கை வைப்பதன் அடிப்படையில் ஹோம் சென்டர்களில் தேர்வுகளை நடத்துவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.

தேர்வில் முறைகேடு

முன்னதாக சிபிஎஸ்இ பள்ளிகௌக்கான முதல் பருவத் தேர்வு நடத்தப்பட்டபோது பல இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இத்தகைய சூழைல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை வெவ்வேறு தேர்வு மையங்களில் நடத்துவதற்கு சிபிஎஸ்இ வாரியம் திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: CBSE, Public exams