சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு மேலும் ஒரு மாதம் தாமதமாகும்... கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம் என யூ.ஜி.சி. அறிவுறுத்தல்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழுமையாக வெளியாக மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என்பதால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம் என பல்கலைகழகங்களுக்கு யூ.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 2021-22ஆம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. இரண்டு அமர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் செயல்பாடு, உள் மதிப்பீட்டு அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.
கடந்த வாரமே சிபிஎஸ்இ பொது தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சில பல்கலைக்கழகங்கள் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான பட்டதாரி படிப்புகளில் பதிவு செய்ய தொடங்கியுள்ள நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அனைத்து பல்கலைகழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Also Read: CUET தேர்விற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை.
சிபிஎஸ்இ முடிவு அறிவிப்பதற்கு முன்னதாக பல்கலைகழகங்களில் காலக்கெடுவை நிர்ணயிக்கப்பட்டால், சிபிஎஸ்இ மாணவர்கள் வாய்ப்பை இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, 12th Exam results, CBSE, UGC