இன்று சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எப்படி தெரிந்து கொள்ளலாம்? எப்போது வெளியீடு?

இன்று சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எப்படி தெரிந்து கொள்ளலாம்? எப்போது வெளியீடு?
சி.பி.எஸ்.இ
  • Share this:
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ முறையில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ முறையில் 16 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையான நிலையில் இன்று 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்துவருகின்றனர.

மாணவர்கள் cbse.nic.in, cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானவுடன் நேரடியாக மாணவர்களின் மெயிலுக்கும் தேர்வு முடிவுகள் சென்றடையும்.


மாணவர்கள் எளிதான முறையில் CBSE10 < ROLLNUMBER > <ADMITCARDID > என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு குறுச்செய்தி அனுப்பினால், தேர்வு முடிவுகளை குறுச்செய்தியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுமுடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading