சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் நேற்றே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மேலும் 10 நாட்கள் தாமதாக வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.
அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.
மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு (Internal Assessment) அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. ஆயினும், சிறந்த செயல் திறன் அடிப்படையில் ஏதேனும் ஒரு அமர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முன்னதாக, கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், வரும் கல்வியாண்டு முதல் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ஆண்டு இறுதித் தேர்வு (Annual Examination) என்ற பழைய முறையில் நடத்த சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.
Must Read : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு
இந்நிலையில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் நேற்றே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனால், மேலும் 10 நாள் தாமதமாக தேர்வுமுடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மாணவகர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam Result, 12th Exam results, CBSC Exam Results, CBSE