BREAKING : சி.பி.எஸ்.இ 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

BREAKING : சி.பி.எஸ்.இ 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து
கோப்புப்படம்
  • Share this:
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி மாதமும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதமும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை அடுத்து சிபிஎஸ்இ தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது.

இதனிடையே சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவு என மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading