ஹோம் /நியூஸ் /கல்வி /

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு : முழு விவரங்கள் இதோ!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு : முழு விவரங்கள் இதோ!

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ

CBSC exam time table : சிபிஎஸ்இ-யில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புக்குப் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரையிலும், 10-ம் வகுப்புக்குப் பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறும்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் 2023-ம் ஆண்டு  பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி துவங்கி மார்ச் 21ம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்குத் தொடங்கி பாடங்களுக்கு ஏற்ற 12.30 முதல் 1.30 வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு அட்டவணை:

12 ஆம் வகுப்பு அட்டவணை:

இரு தேர்வுகளுக்கு இடையே போதுமான கால இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Also Read : TNPSC : குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

மாணவர்கள் JEE தேர்வுக்குத் தயார் செய்ய ஏதுவாகவும், அதற்குத் தகுந்தபடி திட்டமிட முன்கூட்டியே சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: CBSC Exam