முகப்பு /செய்தி /கல்வி / ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் எம்பிஏ சேர வேண்டுமா? - தாட்கோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் எம்பிஏ சேர வேண்டுமா? - தாட்கோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எம்பிஏ நுழைவுத் தேர்வு பயிற்சி

எம்பிஏ நுழைவுத் தேர்வு பயிற்சி

எம்பிஏ படிப்பு சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (Common Admission Test) பயிற்சியை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஐஐடி, ஐஐஎம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பு சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பை (Common Admission Test)  தாட்கோ அறிவித்துள்ளது.

இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள்  B.E, B.Tech, B.Sc, BBA உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள்கூட இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான முழு கட்டணத்தையும் தாட்கோ நிறுவனம் ஏற்கும். இப்பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

தாட்கோ இணையதளத்தில் Student Registration - CAT Exam Training Programmme by TAHDCO என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.  

18 முதல் 27 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்/பெண்கள்/ திருநங்கைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் புகைப்படம்  மற்றும் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் jpeg வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  

First published:

Tags: Education