ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைகோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைகோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைகோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கோப்புப் படம்
  • Share this:
மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சரண்யா , விமல், பரணீஸ்வரன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் இருந்த போது ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.

விதிகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும், மாணவ, மாணவியருக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.படிக்க...தமிழகத்துக்கு கடன் அளவைக் குறைக்கும் ஆர்.பி.ஐ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்


வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடக்கலாமா வேண்டாமா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading