Home /News /education /

சென்னை ஐஐடி-யின் டேட்டா சயின்ஸ் படிப்பில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவித்தொகை - தாட்கோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை ஐஐடி-யின் டேட்டா சயின்ஸ் படிப்பில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவித்தொகை - தாட்கோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

4 வருடம் Bachelor of Science in Data Science & Applications படித்து முடிக்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-ல் நேரடியாக படிப்பதற்கான Gate Exam எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு  சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்ததுடன் இணைந்து தொழில் பாதை திட்டத்தை தாட்கோ (TAHDCO) நிறுவனம் அறிவித்துள்ளது.

    இளங்கலை தரவு அறிவியலில் பட்டப்படிப்புத் திட்டம்:

    உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியலில் பட்டப்படிப்பு திட்டம் சென்னை ஐ.ஐ.டி யால் தொடங்கப்பட்டது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (Diploma) முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பயிலலாம்.

    தற்போது, தமிழ்கத்தில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின  மாணவர்கள் பயன்பாடு வகையில் தாட்கோ (TAHDCO) நிறுவனம் சென்னை ஐஐடி-யுடன் இணைந்துள்ளது.

    முக்கியமான நாட்கள்:

    செப்டம்பர் 2022 ஆம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பிக்க கடைசி தேதி 21 ஆகஸ்ட் 2022.

    தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள், www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

    இத்திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்கு சென்னை ஐஐடி  மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE) பங்கு பெறத் தேவையில்லை.

    அதற்கு பதிலாக 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி, மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் வரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

    இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல், வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    இத்திட்டத்தின், ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன (Multiple Entry and Exit).  அதன்படி, மாணவர்கள் ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள், அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம்.

    இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன.

    மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை(Degree Course) படித்துக் கொண்டே சென்னை ஐஐடி வழங்கும் Bachelor of Science in Data Science & Applications பட்டப்படிப்பையும் பயிலலாம்.

    அத்தியாவசிய தகுதிகள்:

    தொழில் பாதை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க,    12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (Diploma) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களாக இருக்க வேண்டும்.

    மாணவர்கள் தங்களது 12ம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

    10ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

    தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள் சென்னை  ஐஐடி, நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    தெரிவு செய்யப்படும் முறை:

    12ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அனைவரும் சென்னை ஐஐடி நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றால் சென்னை ஐஐடி வழங்கும் Bachelor of Science in (Data Science & Applications) பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள்.

    தேர்வு கட்டணம் ரூ.1500/-

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

    மேற்கூறிய பட்டப்டிப்பிற்கான செலவினை தாட்கோ கல்வி கடனாக வழங்கும்.

    மேலும், விவரங்களுக்கு Career Path Degree Program in IIT Madras for SC/ST students

    CHENNAI IIT PROGRAMMING & DATA SCIENCE

    தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500 க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. மேலும், முறையாக 4 வருடம் Bachelor of Science in Data Science & Applications படித்து முடிக்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-ல் நேரடியாக படிப்பதற்கான Gate Exam எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக்
    கொள்ளப்படும் என்று தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai IIT

    அடுத்த செய்தி