முகப்பு /செய்தி /கல்வி / CUET UG: தேர்வு மையத்தை அடைய முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு: தேசிய தேர்வு முகமை

CUET UG: தேர்வு மையத்தை அடைய முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு: தேசிய தேர்வு முகமை

காட்சி படம்

காட்சி படம்

மேற்கு வங்கம்  Jalpaiguri மற்றும் Punjab's Pathankot  தேர்வு மையத்தைச் சேர்ந்த 190 மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இரண்டாவது கட்டத் தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள்

  • Last Updated :

கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதன் காரணமாக,   CUET தேர்வு மையத்தை அடைய முடியாத தேர்வர்களுக்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வு முகமை இரண்டு கட்டங்களாக நடத்தி வருகிறது.  நீட் தேர்வு போலன்றி, CUET தேர்வு பல நாட்கள் நடைபெறும். அதன் படி, ஜுலை 15,16,19,20 ஆகிய நாட்களில் முதல் கட்டத் தேர்வும், ஆகஸ்ட் 4,5,6,7,8,10 ஆகிய நாட்களில் இரண்டாவது கட்டத் தேர்வும்  நடைபெறுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய முதல்நாள் தேர்வின் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்கு வங்கத்தின் இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை கடைசி நேரத்தில் அறிவித்தது. அதேபோன்று, டெல்லி த்வார்கா பகுதியில்  இருந்த தேர்வு மையத்தை நார்த் கேம்பஸ் பகுதிக்கு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. இதன், காரணமாக பல மாணவர்கள் புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்தை உரிய நேரத்தில் அடைய முடியாமல் போனது.

இதையும் வாசிக்கICSE X Results: இன்று மாலை 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - ஐசிஎஸ்இ

இந்நிலையில், தேர்வு மையத்தை அடைய முடியாத தேர்வர்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேற்கு வங்கம் Jalpaiguri மற்றும் Punjab's Pathankot  தேர்வு மையத்தைச் சேர்ந்த 190 மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இரண்டாவது கட்டத் தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பிற தேர்வு மையங்களில் தேர்வு மையத்தை அடைய முடியாத மாணவர்களுக்கும் இன்னுமொரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முகமை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்க12ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண்களை குறைத்து வழங்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

top videos

    நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் 54,555 பாட பிரிவுகளில் சேரக்கைக்கு இந்த  14 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    First published:

    Tags: Entrance Exam