பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களால் தண்டிக்கப்படலாமா? கல்வி விதிகள் சொல்வது என்ன?
பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களால் தண்டிக்கப்படலாமா? கல்வி விதிகள் சொல்வது என்ன?
மாணவர்கள்
TN Education | பள்ளிகளில் மாணவர்களை தண்டிக்க கூடாது என்ற தமிழக அரசின் சட்டம் உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் என்ன என்பது குறித்த விரிவான தகவல்கள், மற்றும் அரசு விதிகள் சொல்வது என்ன என்பது குறித்து இதில் காணலாம்.
சென்னை பெரவள்ளூரில் யூகேஜி மாணவன் ஆசிரியர்களால் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே பள்ளிகளில் மாணவர்களை தண்டிக்க கூடாது என்ற தமிழக அரசின் சட்டம் உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் என்ன என்பது குறித்த விரிவான தகவல்கள், மற்றும் அரசு விதிகள் சொல்வது என்ன என்பது குறித்து இதில் காணலாம்.
மாணவர்களுக்கு பள்ளிகளில் தண்டனை வழங்கக்கூடாது தமிழக அரசின் அரசாணை சொல்வது என்ன?
மாணவர்களுக்கு பள்ளிகளில் தண்டனை வழங்கக்கூடாது என கடந்த 2001ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எந்த வகையில் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கல்வி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ மன ரீதியாகவோ மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதை தமிழ்நாடு கல்வி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .
ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், சிறந்த மாணவர்களை உருவாக்குவது எப்படி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் என்ன உள்ளிட்ட வழிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் எவ்வாறு நடக்க வேண்டும் :
ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பை பெறக்கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வது என்பது வழக்கொழிந்த முறை எனவே மாணவர்களை நெறிப்படுத்த புதிய முறைகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும்.
பள்ளி வளாகங்களில் வகுப்பறைகளில் மாணவர்களால் நடக்கக்கூடிய பிரச்சனைகளை முழுவதும் அந்தந்த ஆசிரியர்களே கையாளக் கூடிய வகையில் திறன் பெற்றவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அதற்குரிய பயிற்சி ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.
சிறந்த மாணவர்களை உருவாக்குவது எப்படி?
மாணவர்கள் திறம்பட செய்யும் பணிகளை ஆசிரியர்கள் மனமுவந்து வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் பாராட்டுவது
இறைவணக்க கூட்டத்தில் மாணவர்கள் செய்த நற்செயலை குறிப்பிட்டு பாராட்டுவது..
வீட்டுப் பாடங்களை ஐந்து முறைக்கு மிகாமல் எழுத வைத்தல்
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது மைதானங்களை தூய்மைப்படுத்த சொல்வது உள்ளிட்ட பணிகளை வழங்குதல்
மாலை நேரங்களில் சற்று காலதாமதமாக மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தல்
தவறு செய்யும் மாணவர்களை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்வது பிரச்சினைக்குரிய மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசுவது
விளையாட்டு குழுக்களிலிருந்து சில நாட்களுக்கு மாணவர்களை வெளியேற்றுவது தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கல்வி விதிகள் தெரிவிக்கின்றன
கல்வி வளாகங்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் உறவு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான எதிர்கால சமூகம் உருவாகும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக இருக்கின்றது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.