கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு சி.ஏ.படிப்பு கட்டணத்தில் இருந்து விலக்கு!

மாதிரிப் படம்

ஏப்ரல் 1ம் 2020ம் ஆண்டு முதல் மார்ச் 31ம் தேதி 2023ம் ஆண்டு வரை கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்கள் இந்த திட்டத்தால் பலன் அடையலாம்

  • Share this:
    கொரொனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சி.ஏ படிப்பிற்கான கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    சி.ஏ.  எனப்படும் பட்டிய கணக்காளர் படிப்பில் சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.  இந்த பவுண்டேசன் கோர்ஸை  12ம் வகுப்பு முடித்தவர்கள் எழுதலாம் என இருந்தது. பின்னர், 10 ஆம் வகுப்பு படுத்தவர்களும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது.  இந்த நடைமுறை கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.

    இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சி.ஏ. படிப்பிற்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு அறிவித்துள்ளது.  2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2023 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கு மட்டுமே இந்த விலக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்திய  பட்டய கணக்காளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தகவல் தொழில்நுப்டம், நோக்குநிலை படிப்பு உள்ளடக்கிய ICITSS மற்றும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம், மேம்பட்ட நோக்குநிலை படிப்பு உள்ளடக்கிய AICITSS, நிர்வாகம் மற்றும் தொலைத்தொடர் திறன் என சி.ஏ. படிப்பின் அனைத்து நிலைகளுக்கான பதிவு கட்டணத்தில் இருந்து கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு விலக்கு அளிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு: தொடங்குவதற்கு முன்பே 12,837 இடங்கள் காலி!


    ஏப்ரல் 1ம் 2020ம் ஆண்டு முதல் மார்ச் 31ம் தேதி 2023ம் ஆண்டு வரை கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்கள் இந்த திட்டத்தால் பலன் அடையலாம். www.icai.org எனக்கு இணையதள பக்கத்தில் தந்தை அல்லது தாய் கொரொனோவால் இறந்ததற்கான இறப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்து படிப்பிற்கான கட்டணத்தில் இருந்து விலக்கு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: