Home /News /education /

#BYJUSYoungGenius2 ஒரு நாக்அவுட் முதல் எப்பிசோடுடன் மீண்டும் வருகிறது. இதை உடனடியாக காண வேண்டியதற்கான காரணங்கள் இதோ!

#BYJUSYoungGenius2 ஒரு நாக்அவுட் முதல் எப்பிசோடுடன் மீண்டும் வருகிறது. இதை உடனடியாக காண வேண்டியதற்கான காரணங்கள் இதோ!

BYJU’S Young Genius Season 2

BYJU’S Young Genius Season 2

BYJUS Young Genius 2 | ஒன்பது வயதான இஸ்லாம், 2016 இல் இத்தாலியின் ஆண்ட்ரியாவில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை வென்றார்! 2015 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் U-13 பிரிவில் தங்கப் பதக்கம் உட்பட பல பாராட்டுகளையும் பதக்கங்களையும் அவர் தொடர்ந்து வென்றுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  இளம் சாதனையாளர்களும், குழந்தை மேதைகலும் தங்களின் திறமைகளை முழுமையாகப் பிரதிபலிக்கும் சாதனைகளை மேடையில் அரங்கேற்றுவதைக் காண்பது அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கும். குழந்தைகளின் கண்ணில் மின்னும் மகிழ்ச்சியாகட்டும் அல்லது இந்தியாவின் இளம் மேதைகளை அங்கீகரிப்பதில் பார்வையாளர்களின் திருப்தியாகட்டும், இந்த இளம் மேதைகள் மேடையை ஆக்கிரமித்துக்கொள்வதையும், அவர்களின் சிறப்புத் திறமையால் அதை தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வதையும் பார்க்கும்போது நாம் அடையும் தூய்மையான மனமகிழ்ச்சியை மறுக்க முடியாது.

  உலக குத்துச்சந்தை சாம்பியன் தொடர்ச்சியாக இரண்டு முறை

  News18 முயற்சியான BYJU's Young Genius காஷ்மீரில் உள்ள தர்க்போராவைச் சேர்ந்த 14 வயது இளம்பெண் தஜாமுல் இஸ்லாமுடன் தன் இரண்டாவது சீசனை தொடங்கியபோது, அவர் சமூகக் கட்டுப்பாடுகளை அவரது தந்தையின் எதிர்ப்பையும் மீறி உலக குத்துச்சண்டை சாம்பியன் ஆனார்

  அப்போது வெறும் ஒன்பது வயதான இஸ்லாம், 2016 இல் இத்தாலியின் ஆண்ட்ரியாவில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை வென்றார்! 2015 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் U-13 பிரிவில் தங்கப் பதக்கம் உட்பட பல பாராட்டுகளையும் பதக்கங்களையும் அவர் தொடர்ந்து வென்றுள்ளார்.

  தனது ஐந்தாவது வயதிலிருந்து தொடங்கி, இஸ்லாம் அவரது தந்தையின் ஆரம்பகால எதிர்ப்பை முறியடித்து அவரை தனது தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக மாற்றினார். 2016 வெற்றிக்குப் பிறகு, இஸ்லாம் தனது 12 வயதில், நிதி நெருக்கடி காரணமாக குத்துச்சண்டை வகுப்புகளைக் கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 800 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த பிறகு, இஸ்லாம் இப்போது தனது மாணவர்கள் குத்துச்சண்டை போட்டிகளில் பிரகாசித்து விருதுகளைப் பெறுவார்கள் என்று நம்புகிறார்.

  அவரது மிகச் சமீபத்திய சாதனை  என்னவென்றால்,அக்டோபர் 2021 ஆம் ஆண்டு எகிப்தில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று, இந்திய மூவர்ணக் கொடியை மைதானம் முழுவதும் பறக்கவிட்டதுதான். 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை அதிகாரப்பூர்வமாக மாறினால், இஸ்லாம் அதற்கான பெரிய லட்சியங்களைக் கொண்டுள்ளதோடு, ஒலிம்பிக் பதக்கத்தை வென்று நாட்டிற்கு கொண்டு வருவோம் என நம்புகிறார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன், நிகழ்ச்சியில் இஸ்லாமைச் சந்தித்த பிறகு, தனது எதிர்காலத்திற்கான இவ்வளவு புகழ்பெற்ற பின்னணியைக் கொண்ட அவரது தேடலைப் பற்றி நாம் நம்புவதைத் தவிர்க்க முடியாது.

  ஒரு ஒலிம்பியாட் மற்றும் விருது பெற்ற ஆப் டெவலப்பர்

  எப்பிசோடில் இடம்பெற்றுள்ள அடுத்த இளம் மேதையான ஹர்மன்ஜோத் சிங் ஒரு விருது பெற்ற ஆப் டெவலப்பர் மற்றும் ஒலிம்பியாட் சாம்பியன் ஆவார். சில நூறு கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும், 14 வயதான அவர், 2021 ஆம் ஆண்டில் புதுமை வகையின் கீழ் பிரதான் மந்திரி ராஷ்த்ரிய பால் புரஸ்கார் விருதைப் பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார். தனது தாயையும் மற்ற பெண்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு அவர்களின் பாதுகாப்பிற்காக ரக்ஷா பெண்கள் பாதுகாப்பு செயலியை உருவாக்கியதற்காக சிங் நன்கு பிரபலமடைந்தார். 

  இந்தச் செயலி எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டால், காவல்துறை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை அணுகவும், அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளவும், அவசரகால எண்களின் பட்டியலை அழைக்கவும் பயனர்களுக்கு உதவுகிறது.

  Google Play Store இல் இலவசமாகக் கிடைப்பதோடு, 5000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்ட ரக்ஷா பெண்கள் பாதுகாப்பு செயலிக்காக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட White Hat அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலிக்கான் வேலி கவுரவக் குறியீட்டையும் சிங் பெற்றார்.

  சிங்கின் முழுக் குடும்பமும் மருத்துவப் பின்னணியைக் கொண்டது, இருப்பினும் இயற்பியல் மற்றும் கம்யூட்டர்கள் மீதான அவரது ஆர்வம் அவரை 3 ஆம் வகுப்பில் இருந்து ஒலிம்பியாட் தேர்வுகளில் பங்கேற்க வைத்தது. அவர் அந்த நேரத்தில் அறிவியலில் தனது முதல் பதக்கத்தை வென்று, தனது 7 ஆம் வகுப்பில் கோடிங் பயிற்சியைத் தொடங்கினார்.

  ரக்ஷா பெண்கள் பாதுகாப்பு செயலிக்காக அவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், சிங் கடந்த ஆண்டு மேலும் இரண்டு செயலிகளை உருவாக்கியுள்ளார். அவை, இணையவழி மிரட்டல்களுக்கு எதிரான Cyber Buddy செயலி மற்றும் மன ரீதியான உணர்வுகளுக்கு ஆரோக்கியமான அணுகுமுறையை எடுக்க உதவும் Calmify எனப்படும் மனநலப் பாதுகாப்பு செயலி.

  இப்போதைக்கு, Amul நிறுவனத்தின் MD,புதிய மரியாதைக்குரிய நடுவர் மன்ற உறுப்பினர் R S சோதி விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள வகையில் உதவும் ஒரு செயலியைப் பரிந்துரைக்குமாறு சிங்கிடம் கூறியுள்ளார். அந்த செயலியின் வருகைக்கு நாம் காத்திருப்போம்!

  அது மட்டும் இல்லை. அடுத்த வாரம் ஒளிபரப்பப்படவிருக்கும் BYJU's Young Genius இன் இரண்டாவது எப்பிசோடிற்குக் காத்திருப்போம், இந்தியாவின் பல குழந்தை மேதைகளின் சாதனைகளைக் கண்டு உத்வேகம் பெறுவோம். எப்பிசோடைப் பார்த்து மகிழவும், நாங்கள் வழங்கும் செய்திகளை உடனுக்குடன் பெறுவதையும் உறுதிசெய்ய எங்களைப் பின்தொடருங்கள்!
  Published by:Selvi M
  First published:

  Tags: BYJU'S, BYJU'S Young Genius, Education

  அடுத்த செய்தி