Byju's Young Genius | 6 வயதிலிருந்தே ரோபாட்டிக்ஸ் மீதான ஆர்வத்தால் சாதித்த அகுல்
தானியங்கி கேரேஜ், தானியங்கி எரிவாயு சென்சார், தானியங்கி தெரு விளக்குகளை உருவாக்கியுள்ளேன் என்றுள்ளார் அகுல்.
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 5:07 PM IST
பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். பொம்மைகளுக்கு உயிர் கொடுக்கும் குழந்தையை பார்த்திருப்போமா. தோல்விகளுக்குப் பயந்து கனவுகளை ஒளித்துக் கொள்வதற்குப் பெயர் வாழ்க்கை அல்ல... நம் முயற்சிகளால் தோல்விகளையே ஓடி ஒழிய வைப்பதற்குப் பெயர் தான் வாழ்க்கை... அப்படியான வாழ்க்கையின் மற்றொரு பெயர் தான் அகுல்.
கர்நாடக தலைநகர் பெங்ளூருவை சேர்ந்த அகுலுக்கு ரோபாட்டிக்ஸ் மீது அளவில்லா ஆர்வம். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்காக இவர் உருவாக்கிய ப்ளூடூத் தொழில்நுட்ப ரோபோ வேலை செய்யாமல் போனது. அந்த தோல்வியால் தளர்ந்து விடாமல், உத்வேகம் கொண்டு போராடி புதிய வரலாற்றை படைத்தார்.
இந்த தானியங்கி இயந்திரத்திலிருந்து சானிடசைரை அகற்றுவது உள்ளிட்ட அதன் செயல்பாடுகளை அகுல் விளக்குகிறார். தானியங்கி கேரேஜ், தானியங்கி எரிவாயு சென்சார், தானியங்கி தெரு விளக்குகளை உருவாக்கியுள்ளேன். இதற்காக எனக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்றுள்ளார். தனது ரோபாட்டிக்ஸ் கண்டுபிடிப்புகளுக்காக பல பாராட்டுக்களையும், விருதுகளையும் வென்றுள்ளார் அகுல். குடும்பத்தினர் மட்டுமல்ல அகுலின் ஆசிரியரும், அவரை பெருமையுடன் பாராட்டுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளோம். மாணவர்களின் படைப்பாற்றலை உணர்வதற்கு வாய்ப்பு அளிக்கிறோம். அகுலை சந்தித்த பின்னர், அவர் சாதாரண மாணவர் அல்ல என்பதை நாங்கள் கண்டுகொண்டோம்.
தான் ஒரு ரோபாட்டிக்ஸ் பொறியாளராக மாற விரும்புவதாகவும், மனிதர்களின் கட்டளைகளுக்கு இயங்கும் ரோபா ஒன்றை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் அகுல். ரோபாட்டிக்ஸ் உலகில் இது வெறும் ஆரம்பம் தான்... இதனை தொடர்ந்து இன்னும் பல இயந்திரங்கள் அகுல் மூலம் உயிர் பெறப் போகின்றன...
கர்நாடக தலைநகர் பெங்ளூருவை சேர்ந்த அகுலுக்கு ரோபாட்டிக்ஸ் மீது அளவில்லா ஆர்வம். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்காக இவர் உருவாக்கிய ப்ளூடூத் தொழில்நுட்ப ரோபோ வேலை செய்யாமல் போனது. அந்த தோல்வியால் தளர்ந்து விடாமல், உத்வேகம் கொண்டு போராடி புதிய வரலாற்றை படைத்தார்.
இந்த தானியங்கி இயந்திரத்திலிருந்து சானிடசைரை அகற்றுவது உள்ளிட்ட அதன் செயல்பாடுகளை அகுல் விளக்குகிறார். தானியங்கி கேரேஜ், தானியங்கி எரிவாயு சென்சார், தானியங்கி தெரு விளக்குகளை உருவாக்கியுள்ளேன். இதற்காக எனக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்றுள்ளார். தனது ரோபாட்டிக்ஸ் கண்டுபிடிப்புகளுக்காக பல பாராட்டுக்களையும், விருதுகளையும் வென்றுள்ளார் அகுல்.