லாப வீழ்ச்சி காரணமாக 600க்கு மேற்பட்ட தனது பணியாளர்களை கல்வி தொழல்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜுஸ் பணி நீக்கம் செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று முடக்க காலத்தில் நாடு முழுவதும் பள்ளி/கல்லூரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி கற்றல்/கற்பித்தல் செயல்பாட்டினை ஆன்லைன் மூலமாக கொண்டு செல்ல மத்திய/மாநில அரசுகள் முயற்சித்தது. சமூகம் கொரோனா பிடியில் சிக்கியிருந்த நேரத்தில், கல்வித் துறையில் ஆன்லைன் மூலம் பல வகையான படிப்புகளையும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் வழங்குவதற்கு பல்வேறு கல்வி தொழல்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோன்றின.
2021ல் UpGrad, Vedantu, Eruditus, Byjus, Unacademy உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி புதிய நிறுவனங்கள் (யூனிகார்ன்) என்று அங்கீகரிக்கபட்டது. தற்போது, இந்தியாவில் செயல்படும் ஸ்டார்ட் அப்-களில் 4457 நிறுவனங்கள் கல்வித் துறையுடன் தொடர்பானவை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தடுப்பூசி கண்டுபுடிப்பு, ஓமிக்ரான் நோய்த் தொற்றின் குறைவான தீவிரத் தன்மை காரணமாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. அனைத்து வகையான பொருளாதாக நடவடிக்கைகளையும் திறந்த விடப்பட்டன. பள்ளிகள் வழக்கம் போல் இயங்க அனுமதியளிக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளை அதிகாரிகள் கண்டறிந்து மீண்டும் சேர்க்க முயற்சி எடுத்தனர். கற்றல் இழப்புகளை ஈடுசெய்ய மாநில அரசுகள் பல்வேறு முன்மாதிரி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் வாசிக்க: அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
இதன் காரணமாக, அதிகப்படியான தொழில்நுட்ப வெளிப்பாட்டில் இருந்த பள்ளிக் குழந்தைகள் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதால் பெரும்பாலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
முன்னதாக, ஆன்லைன் மூலம் படிப்புகளை வழங்கி வந்த lido நிறுவனம் 1200 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. Vedantu என்ற ஆன்லைன் டியூசன் நிறுவனம் கடந்த மே மாதம் 400க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியது. Udayy என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது ஆன்லைன் கல்வி சேவையை முற்றிலும் நிறுத்துவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இதையும் வாசிக்க: IPBS: 7000க்கும் மேற்பட்ட எழுத்தர் காலியிடங்கள், மிகப்பெரிய பணிச் சேர்க்கையைத் தொடங்கிய ஐபிபிஎஸ்
பைஜு’ஸ்:
கல்வி தொழிற்நுட்பத்தில் கோலோச்சி வரும் பைஜு’ஸ் நிறுவனமும் தற்போது தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில், 300 பேர் டாப்பர் (Toppr) என்ற அதன் துணை நிறுவனத்திலும், 300 பேர் ஒயிட் ஹாட் (Whitehat jr) என்ற மற்றொரு துணை நிறுவனத்திலும் பணி செய்து வந்தனர்.
பைஜு’ஸ் நிறுவனம் ஒயிட் ஹாட், டாப்பர்ஸ் போன்ற பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக இணையவழி கல்வி சேவைகளை வழங்கி வருகிறது. முன்னதாக, ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் என்ற கல்வி நிருவத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பைஜு’ஸ் வாங்கியது. இருப்பினும், இதற்கான பணம் செலுத்துவதில் பைஜு’ஸ் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.