எம்பிபிஎஸ்-க்கு முயற்சித்து கிடைக்காததால் கால்நடை மருத்துவத்தில் சேர்ந்த மாணவர்கள்...

இவர்களில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்கள் 2017-ம் ஆண்டு 12-ம் வகுப்பு முடித்தவர்கள்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 7:14 PM IST
எம்பிபிஎஸ்-க்கு முயற்சித்து கிடைக்காததால் கால்நடை மருத்துவத்தில் சேர்ந்த மாணவர்கள்...
கால்நடை மருத்துவ கவுன்சிலிங்
Web Desk | news18
Updated: July 26, 2019, 7:14 PM IST
கால்நடை மருத்துவ கலந்தாய்வில் முதல் 5 கட் ஆப் இடங்களை பெற்ற மாணவர்கள், கடந்த 2 ஆண்டுகளில் நீட் நுழைவுத் தேர்வுக்கு முயற்சித்து கிடைக்காமல் கால்நடை மருத்துவ இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவப்படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் 15 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சேர்க்கை ஆணைகளை வழங்கினர்.

306 கால்நடை மருத்துவ இடங்களுக்கு 789 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு 463 பேர் கலந்தாய்வில் இன்று பங்கேற்றனர்.


இவர்களில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்கள் 2017-ம் ஆண்டு 12-ம் வகுப்பு முடித்தவர்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக 3 முறை நீட் தேர்வுக்கு முயற்சித்து மருத்துவ இடம் கிடைக்காமல் இந்த ஆண்டு பி.வி.எஸ்.சி படிப்பினை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இவர்கள் 12-ம் வகுப்பில் 1200-க்கு 1160 மதிப்பெண்ணுக்கு அதிகமாகவும், கட் ஆப் மதிப்பெண் 195 -க்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர்.

Loading...

நீட் நுழைவுத்தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் தங்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும் என்று தெரிவித்தனர்.

Also Watch: ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ரூ.1 கோடி... 10 நாட்களில் கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்... தொடரும் சதுரங்க வேட்டை...!

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...