2022-23 ஆம் ஆண்டின் இறுதிக்குள், பள்ளிகளில் 10,000 தரநிலைக் கழகங்களை உருவாக்க (STANDARDS CLUBS) இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் தரநியமங்களை உருவாக்குதல் குறித்தும், தரசான்றிதழின் செயல்பாடுகள் குறித்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தரநிலைகள் கழகங்களை உருவாக்கும் முயற்சியில் தர நிர்ணய அமைப்பு ஈடுபட்டுள்ளது. முதல் ஆண்டான 2021-22ல் நாடு முழுவதும் 1,037 தரநிலைக் கழகங்கள் தொடங்கப்பட்டதாகவும், அதன் வெற்றியை உணர்ந்து, இந்த ஆண்டின் இறுதிக்குள் 10,000 தரநிலைக் கழகங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், " இந்த முயற்சியின் மூலம் 9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள அறிவியல் மாணவர்கள், தரம் மற்றும் தரப்படுத்தல் பற்றி அறிந்து கொள்கின்றனர். இதில் பெறும் கருத்துருக்கள் வளரும் ஆண்டுகளில் அவர்களின் இளம் மனதில் பதிந்து, தேசத்தின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்ட ஒரு பெருஞ்சக்தியாக மாற்றும்" என்று தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்க: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் : பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
ஒவ்வொரு தரநிலைக் கழகமும் அதன் வழிகாட்டியாக ஒரு அறிவியல் ஆசிரியர் மற்றும் உறுப்பினர்களாக குறைந்தபட்சம் 15 மாணவர்களைக் கொண்டுள்ளது. இன்றுவரை 43,000 மாணவர்கள் இந்த தரநிலைக் கழகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். தரநிலைக் கழகங்களின் வழிகாட்டிகளுக்கு இரண்டு நாள் உறைவிடப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுவரை 1000 வழிகாட்டிகள் பயிற்சி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், 2022-23-ஆம் ஆண்டில் 10,000 தரநிலைக் கழகங்களைத் திறப்பது என்ற தற்போதைய இலக்குக்கு இணங்க,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் தரநிலைக் கழகங்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும், ஏற்கனவே 1755 க்கும் மேற்பட்ட கழகங்கள் ஒப்புதலின் முந்திய நிலைகளில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.