ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் ’பயோ மெட்ரிக்’ முறை இன்று முதல் அமல்!

நிக்(Nic) என்னும் மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய தொழில் நுப்பத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் ’பயோ மெட்ரிக்’ முறை இன்று முதல் அமல்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: June 3, 2019, 1:12 PM IST
  • Share this:
ஆசிரியர்களின் வருகையினை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறை இன்று முதல் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 7,728 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டு ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை முறைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.


குறிப்பாக ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிகளுக்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Also read... ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்ப் புலவர்கள் புறக்கணிப்பு - வைகோ கண்டனம்

நிக்(Nic) என்னும் மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய தொழில் நுட்பத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 7728 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயோ மெட்ரிக் பதிவேட்டில் தங்கள் வருகையை பதிவு செய்ய உள்ளனர்.

இது வரை 80% பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதி உள்ளிட்ட கடினமான பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: June 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading