பொறியியல் கலந்தாய்வு நிறைவு.... ஒருவர் கூட சேராத 16 கல்லூரிகள்...!

Tamilnadu Engineering Counseling | 230 கல்லூரிகளில் 30 விழுக்காட்டிற்கும் கீழ் மட்டுமே இடங்கள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 29, 2019, 1:31 PM IST
பொறியியல் கலந்தாய்வு நிறைவு.... ஒருவர் கூட சேராத 16 கல்லூரிகள்...!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: July 29, 2019, 1:31 PM IST
தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 54 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாகவும், 16 தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் ஒரு லட்சத்து 67,000 பொறியியல் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் 4 கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு துணை கவுன்சிலிங் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், 4 கட்ட கலந்தாய்வில் 11 அரசு பொறியியல் கல்லூரிகள், 2 தனியார் கல்லூரிகளிலும் மட்டுமே இடங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. மீதமுள்ள 479 கல்லூரிகளில் 54 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.


230 கல்லூரிகளில் 30 விழுக்காட்டிற்கும் கீழ் மட்டுமே இடங்கள் நிரம்பியுள்ளன. மிகக் குறைந்த அளவில் சிவில் இன்ஜினியரிங் படிப்பிற்கான இடங்கள் 23 விழுக்காடு மட்டுமே நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...  யூட்யூப்பில் பணம் சம்பாதித்து ₹ 55 கோடி வீடு வாங்கிய 6 வயது


Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...