இறுதியாண்டு மாணவர்களைத்தவிர மற்ற அனைவருக்கும் தேர்ச்சி- சட்டக்கல்லூரிகளுக்கு பார் கவுன்சில் அறிவுறுத்தல்

இந்திய பார் கவுன்சில்

சட்டக்கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களைத்தவிர, மற்ற அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

 • Share this:
  இதுகுறித்து பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஆண்டுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் நடப்பு ஆண்டில் உள்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எனினும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டவுடன், முந்தைய ஆண்டுக்கான தேர்வை நடத்தலாம் என்றும், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற்ற பின்னரே பட்டம் பெற முடியும் என்றும் பார் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

  இறுதி செமஸ்டர் எழுத உள்ளவர்களை தவிர பிற மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  தேர்ச்சி அளிக்கும் போது மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இன்டர்னல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

  இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ள பார் கவுன்சில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

  Also read... ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கான விதிகள் உள்ளதா? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Vinothini Aandisamy
  First published: