Home /News /education /

B.E படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்..!

B.E படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்..!

மாணவர்கள்

மாணவர்கள்

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு 0462-2912081, 82, 83, 84 & 85, 044-22351014, 044-22351015 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் துவங்கியது.

மேலும் மாணவர்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்காக 110 மையங்கள் மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பம் செய்வதற்கு உரிய சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ள இடங்கள் விபரங்கள், விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விபரங்கள், கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த முழுமையான விபரம், கல்லூரிகளில் விபரங்கள் அடங்கிய தகவல் கையேடு உள்ளிட்ட விபரங்களும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

ALSO READ |  10th, 12th பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தெரிந்துகொள்வது எப்படி?
மேலும் முதன்முறையாக மாநிலத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பெயர் மற்றும் முகவரி ஆகியவையும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் அரசு பள்ளியில் பயின்றவர்கள் என்ற விபரமும் விண்ணப்பத்தின் பொழுதே கேட்கப்பட்டுள்ளது.


பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டினை எளிதில் வழங்குவதற்காக இந்த தகவல் கூடுதலாக சேகரிக்கப்படுகிறது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும். இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண்(ரேண்டம் எண்) ஜூலை 22ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ம் தேதி முதல் ஜூலை 31 ம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும்.  மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்படும். அதில் குறைகள் இருந்தால் களைவதற்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யலாம்.

 

ALSO READ | அசாத்தியம் என்பது எதுவுமில்லை... அமெரிக்காவில் மேற்படிப்பை திட்டமிடும் இந்திய மாணவர்கள் கவனத்திற்கு..

கலந்தாய்வு விபரம் : 

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 16 முதல் 18 ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

பொதுக் கலந்தாய்வு

பொதுக்கல்வி, தொழில்முறைக் கல்வி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட்  22ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறும்.

இதையடுத்து துணைக் கலந்தாய்வு அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறும்.

அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 17, 18ம் தேதிகளில் நடைபெறும்.

மேலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு 0462-2912081, 82, 83, 84 & 85, 044-22351014, 044-22351015 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: BE students, Education

அடுத்த செய்தி