ஹோம் /நியூஸ் /கல்வி /

உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிப்பைத் தொடர வாய்ப்பு

உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிப்பைத் தொடர வாய்ப்பு

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள இந்திய மாணவர்களை, இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது அல்லது இடமாற்றம் செய்வதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள இந்திய மாணவர்களை, இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது அல்லது இடமாற்றம் செய்வதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள இந்திய மாணவர்களை, இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது அல்லது இடமாற்றம் செய்வதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக இந்தியா திரும்பிய ஆயிரகணக்கான மாணவர்கள் தங்கள் நாட்டில் மருத்துவப் படிப்பை தொடரலாம் என ஆஸ்திரிலேயா வர்த்தகம் மற்றும் முதீலிட்டு ஆணையர் மேனிகா கென்னடி தெரிவித்துள்ளார்.

  உயர்கல்வித் துறையில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது பேசிய அவர்,

  இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதை எளிதாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  ஆஸ்திரேலிய அரசாங்கம் படிப்புக்குப் பிந்தைய பணி விசாக் காலத்தை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. மேலும், சர்வதேச மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கான வேலை நேரங்களில் தற்காலிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த் தொற்று காரணமாக உண்மையான விசா செல்லுபடியாகும் காலத்திற்குள் படிப்பை முடிக்க முடியாமல் மாணவர்கள் கூடுதல் மாணவர் விசா விண்ணப்பத்தை  சமர்பிக்கும் வகையில் விசா கட்டணத் தள்ளுபடி செய்யப்பட்டது.

  தற்காலிக பட்டதாரி விசா வைத்திருக்கும் மாணவர்கள் ஆஸ்திரிலேயாவில் தங்கியிருக்கும்  காலம் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அரசின் பல்வேறுஉதவித் தொகை திட்டங்கள்மூலமாக ஆஸ்திரேலியாவில் கல்விச் செலவு 75 சதவீதத்துக்குமேல் குறைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

  மேலும், உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக இந்தியா திரும்பிய ஆயிரகணக்கான மாணவர்கள் தங்கள் நாட்டில் மருத்துவப் படிப்பை தொடரலாம். ஒவ்வொரு கட்டத்திலும்  மாணவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

  திட்டம் எதுவும் இல்லை: 

  இதற்கிடையே, ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் காரணமாக அங்கிருந்து தாயகம் திரும்பியுள்ள இந்திய மாணவர்களை, இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது அல்லது இடமாற்றம் செய்வதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் பார்வதி பவார் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.

  உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்

  மேலும், வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயின்று தற்போது பயிற்சி மருத்துவராக இருந்து வரும் மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் தங்கள் பயிற்சியை இந்தியாவில் நிறைவு செய்யும் வகையில் அனுமதி வழங்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

  முன்னதாக, கொரோனா நோய்த் தொற்று காரணமாக சீனாவில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் பயிற்சியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  உக்ரைனில் தற்போது நிலவும் சூழ்நிலையில், தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவதும், படிப்பைத் தொடர்வதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. போர் நிறுத்தப்பட்ட பின்னரும், பல்கலைக்கழகங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையிலும் இந்த நிச்சயமற்ற நிலை நிலவும் என்று கணிக்கப்படுகிறது. எனவே, ஆணையர் மேனிகா கென்னடியின் தற்போதைய அழைப்பு மாணவர்கள்  மத்தியில் வரவேற்பை பெற்றாலும், கல்வி மற்றும் இதர  பராமரிப்பு செலவுகள் குறித்த சிக்கல்கள் தொடர்கிறது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Australia, Higher education, Medical Admission, Russia - Ukraine