ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு...

ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு...
மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு
  • News18
  • Last Updated: July 26, 2019, 7:06 PM IST
  • Share this:
ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம் மற்றும் பி. ஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு நடைபெற இருந்தது.

அதே நாளில் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அன்று நடைபெற இருந்த மருத்துவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழக துணைவேந்தர் சுதா சேஷையன், ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மற்ற தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என கூறினார்.

Also watch: 10 நாட்களில் கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்... தொடரும் சதுரங்க வேட்டை..
First published: July 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்